கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.30 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், கொரோனா பாதிப்பில் கேரளம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
நேற்றையத் தரவுகளின்படி அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 3,502 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பு 11,44,594 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மாநில முதல்வர் பினராயி விஜயன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும், கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக விஜயனின் மகள் வீணா விஜயன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: