கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை என்ற விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், என்.எல்.சி நிறுவனத்தில், வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இருமொழி கொள்கைதான் தமிழக அரசின் கொள்கை என குறிப்பிட்ட செங்கோட்டையன், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை என்ற விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் என்றார்.
Advertisement: