தமிழகம்

மதுரையில் கருணாநிதிக்கு சிலை அமைப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை சிம்மக்கல் பகுதியில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை சிம்மக்கல் பகுதியில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி மதுரை நடுமுதலைக்குளத்தைச் சேர்ந்த உக்கிரபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சிலைகள் வைப்பது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் இது தொடர்பாக தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் சிலை வைப்பது தொடர்பான வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisement:

Related posts

புதுவை அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா: முதல்வர் நாராயணசாமி கருத்து!

Jeba

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் தமிழக அமைச்சர்கள் நேற்றிரவு திடீர் சந்திப்பு!

Nandhakumar

நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த போது நேர்ந்த விபரீதம்; ஒருவர் உயிரிழந்த பரிதாபம்!

Jayapriya