செய்திகள் முக்கியச் செய்திகள்

அதிமுகவிற்காக களமிறங்கிய கார்த்திக்!

மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி இருந்தால்தான் நமக்கான உரிமைகளை கேட்டு பெறமுடியும் என்று சங்கரன்கோவிலில் பரப்புரை மேற்கொண்ட நடிகர் கார்த்திக் கூறினார்.

சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கார்த்தி தற்போது தீவிர அரசியல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளாரும் அமைச்சருமான ராஜலட்சுமியை ஆதரித்து வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய நடிகர் கார்த்திக், இங்கு கூடி இருக்கும் மக்களைக் கண்டதும் தனக்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டதாகக் கூறினார்.

மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமாக இருப்பது அதிமுகதான் எனக் கூறிய அவர், 37 எம்பி-க்களை வைத்து கொண்டு திமுக மக்களுக்கு என்ன செய்தது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் தான் இருக்குமிடத்தில் எல்லாம் வெற்றியை சேர்த்துள்ளதாகக் கூறிய அவர், இந்த முறையும் அதிமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Advertisement:

Related posts

வாத்தி கம்மிங் படைத்த புதிய சாதனை; இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்

Saravana Kumar

“மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் இடையே நடைபெறும் யுத்தம்தான் இந்த தேர்தல்”:அமித்ஷா

Karthick

ஹேர் ஸ்ப்ரேயால் வந்த வினை: இளம் பெண் தவிப்பு!

Jayapriya