தமிழகம் முக்கியச் செய்திகள்

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி!

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அமோக வெற்றி பெற்றார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வசந்தகுமார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில், திமுக கூட்டணி சார்பில், மறைந்த எம்.பி வசந்தகுமாரின் மகனும், தமிழக காங்கிரஸ் பொது செயலாளருமான விஜய் வசந்த் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் களமிறங்கினார். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோது, முதல் சுற்றில் இருந்தே விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்தார். இறுதியில், 5 லட்சத்து 76 ஆயிரத்து 37 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் விஜய் வசந்த் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனைவிட ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 950 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

இரண்டாவது இடம்பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் 4 லட்சத்து 38 ஆயிரத்து 87 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிட்டர் ஆல்வின் 58 ஆயிரத்து 593 வாக்குகள் பெற்று 3-வது இடம்பிடித்தார். நான்காவது இடம் பெற்ற மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுபா சார்லஸ் 8 ஆயிரத்து 536 வாக்குகள் பெற்றார். வெற்றிக்குப் பின்னர் நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்த விஜய் வசந்த், தனது தந்தை வசந்தகுமார் வழியில் மக்கள் சேவையாற்றுவேன் என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

இதுவரை இல்லாத அளவு; 11,000த்தை கடந்து பதிவான கொரோனா பாதிப்பு!

Jeba

55 நிமிடத்தில் 55 வகை உணவுகள் சமைத்த 13 வயது சிறுமி!

Jayapriya

பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

Karthick