செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

திமுக எம்.பி கனிமொழி வீடு திரும்பினார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி கனிமொழியை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் வீடு திரும்பியுள்ளார்.

கடந்த 20 நாட்களுக்கு மேலாகத் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி கனிமொழிக்கு, ஏப்ரல் 3ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த 2 ஆம் தேதி அவர் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சென்னைக்கு வந்த அவர், கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில், கொரோனா பாதுகாப்பு கவச உடையுடன் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தனது வாக்கினைச் செலுத்தினார். இதைத்தொடர்ந்து இன்று காலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று முடிவு வந்ததால், ஒரு வாரக் காலம் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து கனிமொழி வீடு திரும்பியுள்ளார்.

Advertisement:

Related posts

தேர்தல் பரப்புரைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு!

Gayathri Venkatesan

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம்:திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

Jeba

இங்கிலாந்தை மிரட்டும் புதியவகை கொரோனா; இந்தியாவில் இன்று அவசர கூட்டம்!

Jayapriya