தமிழகம்

“தமிழகம் வெற்றிநடை போடவில்லை” – கனிமொழி விமர்சனம்

அரசுப்பணம் ஆயிரம் கோடியில் விளம்பரம் செய்து அதன்மூலம் முதல்வர் மட்டுமே வெற்றிநடை போடுவதாக திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரங்களை அனைத்து கட்சிகளும் முன்னெடுத்துள்ளன. விடியலை நோக்கி ஸ்டாலினின் பயணம் என்ற தலைப்பில் திருப்பூரில் திமுக எம்.பி. கனிமொழி பரப்புரை மேற்கொண்டார். திருப்பூர் தெற்கு பகுதியில் பரப்புரைக்கு சென்ற அவர், திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய கனிமொழி, தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கிறது. அதிமுக ஆட்சியில் முதல்வர் மட்டுமே வெற்றிநடை போடுகிறார், தமிழ்நாடு வெற்றிநடை போடவில்லை என்று அவர் விமர்சனம் செய்தார்.

Advertisement:

Related posts

பிரசாத் ஸ்டுடியோவில் உரிமை கோர மாட்டேன்: இளையராஜா

Niruban Chakkaaravarthi

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை; ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

Saravana

மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் பொய்களை பேசி வருகிறார்; அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் விமர்சனம்!

Saravana

Leave a Comment