இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள் விளையாட்டு

தொடர்ந்து தோல்வி.. சன் ரைசர்ஸ் அணி கேப்டன் வார்னர் அதிரடி நீக்கம்!

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதை அடுத்து , சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. கொரோனா காரணமாக நடப்பாண்டு இந்தியாவின் ஆறு நகரங்களில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் லீக் போட்டிகளும், பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்திலும் நடைபெறுகிறது.

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்பட்டு வந்தார். இந்த தொடரில் சன் ரைசர்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அந்த அணி சந்தித்த ஆறு போட்டி களில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்த தோல்விகளுக்கு தானே பொறுப்பேற்பதாக டேவிட் வார்னர் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சன் ரைசர்ஸ் நிர்வாகம் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரை நீக்கியுள்ளது. அவருக்குப் பதிலாக கேன் வில்லியம்சனை புதிய கேப்டனாக நியமித்துள்ளது.

Advertisement:

Related posts

“கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை அவசியமில்லை” – தமிழிசை சௌந்தரராஜன்

Karthick

2021ம் ஆண்டின் முதல் விண்வெளி பயணம்: PSLV-c51 முழுவிவரம்!

Jeba

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி விட்டனர் – விவசாய சங்கம்

Nandhakumar