தமிழகம்

காஞ்சிபுரம் அருகே விஷவாயு தாக்கி 3 துப்புரவு பணியாளர்கள் பலி

காஞ்சிபுரம் அருகே விஷவாயு தாக்கி 3 துப்புரவு பணியாளர்கள் பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு உணவுப் பொருள் தயாரிக்கும் போது வீணாகும் கழிவுநீரை தொட்டியில் சேகரித்து, குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வெளியேற்றி வந்தனர். இந்நிலையில், இன்று, அந்த கழிவுநீரை அகற்றுவதற்காக காட்டரம்பாக்கத்தைச் சேர்ந்த முருகன், பாக்யராஜ் மற்றும் அமரம்பேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் உள்ளிட்ட 3 பேரும் கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கினர்.

அப்போது தொட்டிக்குள் இருந்த விஷவாயு தாக்கியதால், அவர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Related posts

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

L.Renuga Devi

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50 பேர் வீல் சேருடன் காந்தி சிலை முன்பு போராட்டம்!

Jayapriya

பொதுத் தேர்வு ரத்து செய்ய வாய்ப்பில்லை : அன்பில் மகேஷ்

Jeba

Leave a Comment