செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

வருமான வரி ஏய்ப்பு செய்தது நிரூபிக்கப்பட்டால் ம.நீ.ம. பொருளாளர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்: கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் மேற்க்கொண்ட சோதனையில், வருமான வரி ஏய்ப்பு செய்ததாக நிரூபிக்கப்பட்டால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர், கட்சியில் இருந்தே நீக்கப்படுவார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கோவை கணபதி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார்.

இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை பூ மார்க்கெட் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதியில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த கமல்ஹாசனுடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்

Advertisement:

Related posts

பொங்கல் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

Saravana

“சபாநாயகர் பதவிக்கு கௌரவம் சேர்த்தவர் பி.ஹெச் பாண்டியன்” – முதல்வர் பழனிசாமி

Jeba

யாசகம் கேட்கும் பெண்; மனதை உருக்கும் வீடியோ!

Jayapriya