இந்தியா செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முன்னிலை

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் அதிமுக, திமுக தலைமையில் ஓர் கூட்டணியும், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஓர் அணியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மற்றொரு அணியும் களம் இறங்கின. சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி, தனியாகப் போட்டியிட்டது. தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை பெற்றுள்ளார். முதல் சுற்றில் அவர் 1392 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

Advertisement:

Related posts

பூனையால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: எதற்காக தெரியுமா?

Karthick

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

Ezhilarasan

அனைவரும் பசியாற ஆட்சி செய்த அரசு அதிமுக: ஓபிஎஸ்

L.Renuga Devi