இந்தியா செய்திகள் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

’மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்’: கமல்ஹாசன் ட்வீட்!

சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 6 ஆம் தேதி நடந்த சட்டமன்றத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இதில் கோவைத் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். அவர் 51,481 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர், ’மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர் களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம் என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்

Advertisement:

Related posts

டெல்லி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்!

L.Renuga Devi

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள் ஒதுக்கீடு!

Jeba

ஆபரணத் தங்கம் திடீர் விலை சரிவு!

L.Renuga Devi