அதிமுக எந்த சலசலப்புக்கும் அஞ்சாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய திருத்தலத்தில் முன் முகப்பு ஆர்ச் திறப்பு விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்றார்.
அதைத்தொடர்ந்து பாண்டவர்மங்கலத்தில் 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை, மற்றும் செண்பவல்லி அம்மன் கோயில் அருகே 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பாலம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக விமர்சனம் செய்தார். அதிமுக கட்சியில் இல்லாதவர்களை பற்றி பேச வேண்டாம் என்பதற்காக, தேவைற்ற விமர்சனங்களை தவிர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement: