செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

எப்போதும் மக்களோடு நேரடித் தொடர்பில் இருப்பேன்-கடம்பூர் ராஜூ!

எப்போதும் மக்களோடு நேரடித் தொடர்பில் இருப்பேன் என கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தொகுதிக்கு உட்பட்ட குப்பனாபுரம், சொக்கலிங்கபுரம், கலிங்கப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்தார்.

அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தனக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும், கோவில்பட்டி தொகுதி மக்கள் தனக்கு வாழ்க்கை கொடுத்ததாகவும் கூறினார்.

மக்களுக்கும் தனக்குமிடையே எப்போதும் யாரும் இருந்ததில்லை என்று கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, மக்களோடு நேரடியாகத் தொடர்புகொள்ளும் வகையிலேயே கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளதாகவும். இனியும் அப்படியே இருப்பேன் என்றும் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

9 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

L.Renuga Devi

தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை!

Karthick

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

Niruban Chakkaaravarthi