இந்தியா முக்கியச் செய்திகள்

பிரபல பத்திரிக்கையாளர் பிரியாவை விடுவித்தது டெல்லி நீதிமன்றம்!

பிரபல பத்திரிக்கையாளர் பிரியா ரமணிக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கிலிருந்து பத்திரிகையாளர் பிரியா ரமணியை விடுவித்தது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம்!

2014-ல் மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர், அவருக்கு கீழ் தான் பணியாற்றியபோது பாலியல் தொந்தரவுக்கு உள்ளக்கப்பட்டதாக பிரபல பத்திரிக்கையாளர் பிரியா ரமணி 2018-ல் நாடு முழுவதும் METOO இயக்கம் பிரபலமடைந்தபோது தெரிவித்திருந்தார். இச்சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அக்பர் அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக அக்பர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் வழக்கின் மீதான இறுதி கட்ட விசாரணையை டெல்லி பெருநகர நடுவர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி ரவீந்திரா குமார் பாண்டே விசாரித்து முடித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அக்பரின் குற்றச்சாட்டுகளிலிருந்து ரமணியை விடுவிப்பதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

“தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி

Jeba

செங்கோட்டையில் போலீசார் விரட்டி, விரட்டி தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ!

Nandhakumar

நாட்டின் நலனுக்காகவே சுயசார்பு இந்தியா திட்டம்; பிரதமர் மோடி கருத்து!

Saravana