செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் கோசல்ராம் மறைவு: முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் இரங்கல்!

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கோசல்ராம் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “மூத்த பத்திரிகையாளர் திரு.கோசல்ராம் அவர்களது மறைவை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தன்னுடைய ட்வீட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழின் மூத்த பத்திரிகையாளர்களில் முக்கியமானவரான கோசல்ராம், 49 வயதில் அகால மரணமடைந்தது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். புலனாய்வு இதழியலில் சிறந்து விளங்கிய அவரது மறைவு அதிர்ச்சியையும் வேதனையுயும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “பிரதான நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் செய்தியாளர் முதல் ஆசிரியர் பொறுப்பு வரை பணி புரிந்தவரும்; நியூஸ் 7 தமிழ் தொலைக் காட்சியின் நிர்வாக ஆசிரியருமான திரு கோசல்ராம் அவர்களின் திடீர் மறைவு எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பழகுவதற்கு இனிய குணம் கொண்டவர் இவ்வளவு இளம் வயதில் மரணத்தை தழுவியது நம் வேதனையை அதிகமாக்குகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் பத்திரிகை உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு அழுத்தங்களுக்கிடையே பணிபுரியும் பத்திரிகையாளர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று இந்த நேரத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

விசிக தலைவர் தொல் திருமாவளவன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி, கவிஞர் வைரமுத்து ஆகியோரும் மூத்த பத்திரிகையாளர் திரு.கோசல்ராம் அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Related posts

தேர்தலால்தான் கொரோனா பரவல் அதிகரித்தது: கிருஷ்ணசாமி

Ezhilarasan

தேவேந்திர குல வேளாளர் குறித்த சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்!

Jeba

டெல்லி விவாசாயிகள் போராட்டத்துக்கு சென்ற 82 வயது சமூக செயல்பாட்டாளர் பில்கிஸ் தாதி கைது!

Dhamotharan