செய்திகள்

விலையுயர்ந்த காரை காபி கடையாக மாற்றியுள்ள இளைஞர்..

ஜோர்டன் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமது விலையுயர்ந்த காரை காபி கடையாக மாற்றி உள்ளார்.

ஜோர்டானின் அமான் பகுதியை சேர்ந்தவர் ஃபேடி அகமது. இவர் தனது விலையுயர்ந்த வோக்ஸ்வாகன் காரை காபி கடையாக மாற்றியுள்ளார். காலை நேரங்களில் தனது காரை சாலையோரம் நிறுத்தி வைத்து, காபி விற்பனை செய்து வருகிறார். இவரது கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சுவை நன்றாக இருப்பதால் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஃபேடி தெரிவித்துள்ளார். மேலும் விற்பனைக்கு வர சிறிது தாமதமானால் வாடிக்கையாளர்கள் தனக்கு போன் செய்து ஏன் வரவில்லை. சீக்கிரம் வாருங்கள். உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என தெரிவிக்கின்றனர். அவர்களின் இந்த அன்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என தெரிவித்தார்.

இந்த கடை குறித்து ஒருவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தினமும் இதே சாலை வழியேதான் நான் பயணம் செய்வேன். திடீரென இளைஞன் ஒருவன் காரை காபி கடையாக மாற்றி அதிலிருந்து அனைவருக்கும் காபி வழங்குவதை பார்த்தேன். அதனால், அதை குடித்து பார்க்கலாம் என எண்ணி முயற்சித்தேன். அருமையாக இருந்தது. மேலும் அவர் மிகவும் சுத்தமாக காபி தயாரித்து வருகிறார். அதனால், தினமும் நான் இங்கு காபி குடித்துவிட்டு தான் செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு ராமதாஸ் வரவேற்பு!

Gayathri Venkatesan

ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றங்கள் நிகழும்:சத்யநாராயணா

Niruban Chakkaaravarthi

பாஜக இந்துத்துவ கொள்கையை திணிக்க முயற்சிக்கிறது : விஜய் வசந்த்!

Karthick