இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

வேலைவாய்ப்பில் உள்ளூர்வாசிகளுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 75 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளூர் மக்களுக்கு அளிப்பதற்கான திட்டத்தை அம்மாநில அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் அளிக்கப்படும் இந்த 75 சதவீதம் இடஒதுக்கீடு திட்டத்தை, தனியார் நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டதாகவும் விரைவில் அரசு அறிவித்த பிறகு அதற்கு ஒப்புதல் வழங்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த இடஒதுக்கீடு அமலாகும் முறையானது, ஒரு தனியார் நிறுவனத்தில் நூறு இடம் காலியாக இருக்கிறது என்றால் அதில் 75 இடங்கள் உள்ளூர்வாசிகளுக்கு அளிக்கப்படும். குறிப்பாக 30 ஆயிரத்துக்கும் குறைவாக ஊதியம் வாங்கும் நபர்களுக்கு மட்டும்தான் இது பொருந்தும் எனக் கூறப்படுகிறது. மேலும் இதுபோன்று கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் நலத்திட்டங்களை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இந்த கூட்டத் தொடரில் அறிவிப்பார் என்று சட்டப்பேரவை செயலாளர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை

Gayathri Venkatesan

”தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

Jayapriya

வெனிசுலா அதிபரின் பக்கத்தை முடக்கிய பேஸ்புக்!

Saravana Kumar