செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணி கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. சென்னை காமராஜர் சாலையில் மெரினா கடற்கரையில் 9.09 ஏக்கர் பரப்பளவில் பீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்டமாக இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை ஜனவரி 27ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அன்று முதல் நினைவிடத்தை ஏராளமானோர் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மூடப்பட்டிருந்த நிலையில், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து இன்று அருங்காட்சியகம் மற்றம் அறிவுசார்பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

“திருமங்கலத்தில் அமையவுள்ள ரயில்வே மேம்பாலம் தமிழகத்தின் சாதனை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது” – ஆர். பி உதயகுமார்

Saravana Kumar

நடிகர் கமல்ஹாசனுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்; அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து!

Saravana

லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம்: ராஜஸ்தான் விரைந்த போலீசார்!

Saravana