தமிழகம் முக்கியச் செய்திகள்

ஜெயலலிதா இல்லத்தை பார்வையிட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, நினைவில்ல திறப்பு விழாவை நடத்திக் கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் துவக்க விழாவுக்கு பின் போயஸ் தோட்ட இல்ல சாவியை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்கவும், உத்தரவிட்டிருந்தார்.


இந்த இடைக்கால உத்தரவுகளை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ் அரசு தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்து, இழப்பீடு தொகை வழங்கப்பட்டதை எதிர்த்து என வெவ்வேறு வழக்குகள் வெவ்வேறு அமர்வுகளில் விசாரணையில் இருப்பதால், அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனி நீதிபதி முன்புள்ள வழக்கில் உரிய தீர்வை பெற்றுக் கொள்ளுமாறு இருதரப்புக்கும் அறிவுறுத்தி, தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Advertisement:

Related posts

கூட்டணி குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: டிடிவி தினகரன்

Ezhilarasan

மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நகர்ந்த இங்கிலாந்து!

Jayapriya

2021 தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கும் – மு.க. ஸ்டாலின்

Jeba