உலகம் முக்கியச் செய்திகள்

ஜப்பானில் நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் நேற்று 7.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தையடுத்து கடலேரா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2011ல் ஏற்பட்ட நிலநடுக்கதை போலவே, ஜப்பானில் நேற்று அதிகாலை வடகிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடகிழக்கு பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் டோக்கியோவிலுள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து நில அதிர்வுகள் நீடித்ததால் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement:

Related posts

திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத ரூபாய் நோட்டு: துணை முதல்வர்!

Saravana Kumar

“தமிழகத்தில் காலூன்ற பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள் பலிக்காது” – மு.க.ஸ்டாலின்

Saravana Kumar

ஆப்கானிஸ்தானில் 3 பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொலை!

Jeba