முக்கியச் செய்திகள்

12 வயதில் மும்பைக்கு சென்று, ஷூ தயாரிக்கும் தொழிலதிபரான ஜமீல் ஷா!

12 வயதில் பாலிவுட் நட்சத்திரங்களை சந்திக்க வெறும் காலோடு மும்பைக்கு வந்த பீகாரை சேர்ந்த ஜமீல் ஷா, ஷு தயாரிக்கும் தொழிலதிபராக மாறி அசத்தியுள்ளார்.

பீகார் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜமீல். இவருடைய தந்தை பண்ணை தொழில் செய்து வருகிறார். வறுமையின் காரணமாக இவர் பள்ளிக்கு செல்ல இயலததால் உள்ளூரிலேயே வேலைக்கு சேர்ந்தார். பின்னர் 12 வயதில் டெல்லிக்கு சென்று பணப்பைகள் (Wallets and Purses) உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றினார்.

இதையடுத்து மும்பையில் தாராவி லெதர் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருடன் பணி புரிந்த சக பணியாளர் அவரை நம்ப வைத்து ஏமாற்றி பணத்தை பறித்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த ஜமீல் மீண்டும் பணத்தை சேர்ப்பதற்கு கடினமாக உழைத்தார். பின்னர், ஜமீல் நடனக்கலை உலகத்துக்குள் நுழைந்தார். இது அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் மூலமாக அவருக்கு சினிமா பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2000ஆம் ஆண்டில் மீண்டும் மும்பையில் லெதர் ஆலையில் பணிக்கு சேர்ந்து சொந்தமாக காலனிகளை உருவாக்கினார். சிறிது காலம் கழித்து அவர் உருவாக்கிய காலனியின் தேவை அதிகரித்தது. சினிமா பிரபலங்கள் பலர் இவர் தயாரிக்கும் ஷுக்களுக்கு ரசிகர்களாகி விட்டனர்.

தொழிலின் உச்சத்தை அடைந்த பிறகு, தன்னுடைய பெற்றோர் விவசாயம் செய்வதற்கு நிலத்தை வாங்கி பரிசளித்துள்ளார். தொழிலில் பல நெருக்கடிகள் இருந்தாலும், நேர்மையே அவருடைய வளர்ச்சிக்கு காரணம் என்று தெரிவித்தார்.

Advertisement:

Related posts

நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.3,108 கோடி தேவை: தமிழக அரசு

Saravana

ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

Saravana

ராம்கோ குழுமத்தில் ஒரு புதிய நட்சத்திரம்; நடிகையாக அறிமுகமாகும் சந்தியா ராஜூ!

Jayapriya

Leave a Comment