கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிகட்டு காளையை 2 மணிநேர போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக மீட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்கட்டளை கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற திருமங்கலம் அருகே நெடுங்குளத்தைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கு சொந்தமான காளை, ஜல்லிகட்டு போட்டியில் பங்கேற்று ஓடி வரும் போது ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரமன்பட்டி ராமசாமி என்பவரின் கிணற்றில் தவறி விழுந்தது.

சம்பவமறிந்து விரைந்து வந்த டி.கல்லுப்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள், ஏடிஎஸ்பி. வனிதா, பேரையூர் டி.எஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலிசார் கிணற்றில் விழுந்த காளையை சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர்.
Advertisement: