சினிமா செய்திகள் முக்கியச் செய்திகள்

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கும் பட ஷூட்டிங் நிறைவு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கியுள்ள பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ‘ஜெயில்’ என்ற படத்தை இயக்கியுள்ளார், வசந்தபாலன். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, தனது அடுத்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸை ஹீரோவாக்கி உள்ளார், வசந்தபாலன். கார்த்தியின் ‘கைதி’ மற்றும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் அர்ஜுன் தாஸ். இந்தப் படத்தின் மூலம் அவர் ஹீரோவாகி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பு இப்போது நிறைவடைந்து விட்டது.

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கிறார். துஷாரா, பா. ரஞ்சித் இயக்கும் சார்பாட்டா பரம்பரை படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது.

Advertisement:

Related posts

தலைமைச் செயலகம் அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் திடீர் போராட்டம்!

Ezhilarasan

புதுச்சேரியில் 5 மணி நிலவரப்படி 77. 82% வாக்குப்பதிவு!

Gayathri Venkatesan

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி!

Saravana Kumar