இந்தியா முக்கியச் செய்திகள்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு; சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜராவதிலிருந்து விலக்கு!

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராவதில் இருந்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விலக்கு அளித்தது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தொடர்பாக இருவரும் இன்று நேரில் ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் அமர்வில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்குக் கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

என்ன காரணத்துக்காக விலக்கு கோருகிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று மாலை தான் முடிவடைந்தது, தேர்தல் தொடர்பாக பணிகளில் இருவரும் ஈடுபட்டிருந்ததால் அவர்களால் இன்று வர இயலவில்லை, எனவே விலக்கு கோருகிறோம் என்று குறிப்பிட்டனர்.

இதனை ஏற்ற நீதிபதி நேரில் ஆஜராவதிலிருந்து ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார். வழக்கையும் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Advertisement:

Related posts

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!

Jayapriya

தேர்தல் பரப்புரையில் எம்.ஜி.ஆர் பாடலை பாடிய ஸ்டாலின்!

L.Renuga Devi

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு!

Jayapriya