இந்தியா

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம உலோகத்தூண்!

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் தோன்றிய மர்ம உலோகத்தூண் தற்போது இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் தோன்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் கடந்த நவம்பர் மாதம் உலகில் முதன் முறையாக மோனோலித் எனப்படும் மர்ம உலோகத்தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், சில நாட்களில் தூண் மர்மமாக மறைந்தது. இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று கொண்டிருந்த வேலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில்
அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தூண் எப்படி வந்தது என்பது தொடர்பான மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் இந்த மர்ம உலோகத்தூண் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள பூங்காவில் திடீரென தோன்றிய இந்த தூண் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டது. இதுபோன்ற தூண் இந்தியாவில் தென்பட்டது இதுதான் முதல் முறையாகும்.

இதனிடையே அகமதாபாத்தில் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகத்தூண் தனியார் நிறுவனம் ஒன்றால் நிறுவப்பட்டது என தெரியவந்ததால் இதன்மேல் இருந்த மர்மம் விலகியது. இது தொடர்பாக தெரிவித்துள்ள அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் பூங்காக்கள் மற்றும் தோட்ட உதவி இயக்குநர் திலிபாய் படேல், பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பான தனியார் நிறுவனத்தால் இந்த உலோகத்தூண் நிறுவப்பட்டதாக தெரிவித்தார்.

Advertisement:

Related posts

அடுத்த ஆண்டு அகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்புமருந்து; சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்!

Dhamotharan

திடீரென தீப்பற்றிய கார்; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தாய், குழந்தை

Jayapriya

உபியில் காதலை கைவிட மறுத்ததால் பெண்ணை உயிரோடு எரித்து கொலை செய்த பெற்றோர்..

Dhamotharan

Leave a Comment