உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள்

இந்தியப் பயணிகளுக்கு நியூசிலாந்தில் அனுமதி இல்லை

நியூசிலாந்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக வரும் 11-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை இந்திய பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சென்றவாரம் புதிதாக 23 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 17 பேர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்த் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “இந்தியாவிலிருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்குத் தற்காலிகமாகவே தடைவிதிக்கப்பட்டுள்ளது”என்று தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாகத் கொரோனா நோய் தொற்று அதிவேகமாகப் பரவி வரும் நிலையில் ஏப்ரல் 11-ம் முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை நியூசிலாந்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் கொரோனா பரவல் சமூக பரவலாக மாறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட்டில் புதிய தளர்வு!

Saravana Kumar

தமிழகத்தில் 71.79% வாக்குப்பதிவு!

L.Renuga Devi

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு?

Saravana Kumar