இந்தியா செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

வெளிநாடுகளுக்கு படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாகக் கடந்த ஓராண்டுக்கு மேலாக உலக மக்கள் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். இதன்காரணமாக வெளிநாடுகளில் படித்துவந்த இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் நாடு திரும்பினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு 72-ஆயிரம் மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு படிக்க சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அளித்துள்ள தகவலில் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 55 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன்காரணமாக 2.6 லட்சம் மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பது தடைப்பட்டுள்ளது.

கடந்த 2019- ம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 5.9 லட்சமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. பொதுவாக வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்திலேயே விசாவுக்கான பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது கொரோன அச்சம் காரணமாக விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையே குறைந்துள்ளது.

இந்த ஆண்டு ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து 11,750 மாணவர்கள் படிக்க வெளிநாடு சென்றுள்ளனர். நாட்டில் ஆந்திராவில் இருந்துதான் அதிகளவு மாணவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு 35,614 மாணவர்கள் சென்றிருந்தனர். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் இருந்து 10,166 (கடந்த ஆண்டு 29,079) பஞ்சாப் 5,791 (கடந்த ஆண்டு 33,412) குஜராத் 6,383 (கடந்த ஆண்டு 23,156) தமிழகம் 4,355 (கடந்த ஆண்டு 15,564) கர்நாடகம் 4,176 (கடந்த ஆண்டு 13,699)

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று 2-வது அலை, 3-வது அலை என பல நாடுகளில் திவீரமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்காரணமாக பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகளை வெளிநாடு சென்று படிக்க அனுமதிக்கும் ஆர்வம் குறைந்துள்ளது.

Advertisement:

Related posts

ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக களமிறங்கும் சச்சின் மகன்!

Karthick

புதுச்சேரியில் மீனவர்கள் சாலை மறியல்!

Gayathri Venkatesan

விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை தொடக்கம்!

Gayathri Venkatesan