இந்தியா உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள் விளையாட்டு

போராடி தோற்றது இங்கிலாந்து அணி! தொடரை கைப்பற்றியது இந்தியா!!

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று காராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் தொடங்கிய இந்திய அணி 48.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்கள் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்திருந்தது.

தொடக்கத்தில், ஷிகர் தவான் அதிரடியாக ஆடி 10 பவுண்டரிகளை விளாசி தள்ளியது. தொடர்ந்து 67 ரண்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து ரிஷாப் பண்ட் 78 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஹர்தீக் பாண்ட்யாவும் 64 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்நிலையில் 329 ரன்கள் எடுத்து மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் இரண்டாவது இன்னங்கிஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, கடும் போராட்டத்துடன் விளையாடியது. இதில் அதிகப்பட்சமாக சாம் கர்ன் 95 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். முன்னதாக டேவிட் மலன் 50 ரன்கள் எடுத்தும், லியம் லிவிங்ஸ்டன் 36 ரன்கள் எடுத்து அணியை முன்னோக்கி செலுத்தினர். ஆனால், 7 ரன்கள் வித்தியாசத்தில் அனைத்து பந்துகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டி20, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் என மூன்று தொடர்களை விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி பெரும் வெற்றிப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

Karthick

தேர்வில் சினிமா பாடல் எழுதிய மாணவன்; ஆசிரியர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை

Saravana Kumar

மழைநீரில் மூழ்கிய மக்காச்சோளம்; ரூ.1 கோடி நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை!

Jayapriya