இந்தியா

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்!

அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கும்படி இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

இந்தியா-இலங்கை இடையேயான கூட்டு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் இந்திய தரப்பில் இருந்து மத்திய மீன் வளத்துறை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். இங்கை தரப்பில் அந்நாட்டின் மீன் வளத்துறை செயலாளர் ரத்ன நாயகே பங்கேற்றார்.

கடந்த காலங்களில் இருநாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் மீனவர்கள் விவகாரத்தில் தொடர்ந்து மனித நேயத்துடன் கூடிய அணுகுமுறையை கடைபிடிக்குமாறு இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அண்மையில் இலங்கை கடற்படை சிறைபிடித்த 40 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

மீனவர்களுக்கு போதுமான தூதரகத்தின் உதவியை அளிப்பதற்கு இந்தியாவுக்கு இலங்கை அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இருநாட்டு கடல் எல்லையில் பரஸ்பரம் கடற்படைகளின் கண்காணிப்பை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி: முடிவை மறு பரிசீலனை செய்ய முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம்!

Saravana

கண்களை கட்டி ரூபிக் கியூப் விளையாடி 13 வயது சிறுமி சாதனை

Jayapriya

வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது கட்டாயம் இல்லை: டெல்லி உயர்நீதிமன்றம்!

Jayapriya

Leave a Comment