செய்திகள் முக்கியச் செய்திகள்

ஐநாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்: தம்பிதுரை

ஐநாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இதனிடையே ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என மாநிலங்களவை கூட்டத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். மேலும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால் அங்கு வாழும் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட முடியாது என்றும், எதிர்காலத்திலும் தமிழரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க முடியும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்தியா ஆதரவு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், எந்த நாட்டில் எந்த இனம் உரிமைக்காக போராடினாலும் அதிமுக அதை ஆதரித்தே வந்துள்ளது எனக்கூறிய தம்பிதுரை, இனப்பிரச்சனையும் தாண்டி முக்கியமானது என்பதால் இலங்கை தமிழருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.

Advertisement:

Related posts

அதிமுகவில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம்!

Gayathri Venkatesan

100 நாட்களில் கரூர் சாலைகள் புதுப்பிக்கப்படும்: செந்தில் பாலாஜி

L.Renuga Devi

“திமுக தேர்தல் அறிக்கை டூப்ளிகேட் அறிக்கை” – ஓபிஎஸ் விமர்சனம்!

Gayathri Venkatesan