இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

வங்கதேசத்திற்கு இலவசமாக 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா

இந்தியா வங்கதேசத்திற்கு 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். மேலும் அந்நாட்டின் 50 வது சுதந்திரதின விழாவில் அவர் கலந்துகொண்டார். கொரோனா தொற்று பரவத்தொடங்கியது முதல் பிரதமர் மோடி சூற்றுப்பயணங்களை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்கதேசத்திற்கு சென்றிருக்கிறார். நேற்றைய தினத்தில் பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர், இரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்தும் வகையில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அத்துடன் வங்கதேசத்திற்கு இந்திய அரசு 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கியது.

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் சீரம் நிறுவனத்துடனான ஒப்பந்தப்படி, 300 லட்ச கொரோனா தடுப்பூசிகள் அந்நிறுவனம் வங்கதேசத்திற்கு வழங்க வேண்டும். 16 கோடிக்கு அதிகமாக மக்கள் தொகையை கொண்ட வங்கதேசத்திற்கு 9 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தற்போதுவரை சீரம் நிறுவனம் வழங்கி உள்ளது. இதனிடையில் வங்கதேசத்தின் வெளியுரவுத்துறை அமைச்சர் எக அப்துல் மோமன் ‘சீரம் நிறுவனம் தொடர்ச்சியாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும்’ என்று வேண்டுகோள்விடுத்தார்.

வங்கதேசத்தில் இதுவரை 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக வங்கதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 3,674 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் 591,806 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 8,869 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement:

Related posts

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் ருக்மணி விஜயகுமாரின் யோகா வீடியோ!

Jeba

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று; மலேசியாவில் அவசர நிலை பிரகடனம்!

Saravana

கொரோனா எதிரொலி: திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் நிறுத்தம்

Karthick