3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் சென்னையில் இருந்து அகமதாபாத் புறப்பட்டனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் இரு டெஸ்ட் போட்டிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி, வருகிற 24ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக, இரு அணி வீரர்களும், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டு சென்றனர். கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளும், அதே மைதானத்தில் நடைபெறவுள்ளன.
Advertisement: