இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

நாடு முழுவதும் ஒரேநாளில் 1,31,968 பேர் பாதிப்பு!

இந்தியா முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 1,31,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 61,899 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 780 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இப்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 608 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுவரை மொத்தம் 9 கோடியே 43 லட்சத்து 34 ஆயிரத்து 262 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா தடுப்பூசி போதுமான அளவு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

சட்டமன்ற தேர்தல்: சிறப்பு பேருந்துகள் விவரம்

Gayathri Venkatesan

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை? உயர் நீதிமன்றம் கேள்வி

L.Renuga Devi

மத்திய பட்ஜெட் : திருக்குறளை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமன் உரை

Saravana