ஆசிரியர் தேர்வு இந்தியா

பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் இந்திய சீனா படைகள் முழுமையாக வாபஸ்

இந்திய-சீன எல்லையில் இருந்து இருநாட்டு படைகளும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி அருகில் உள்ள இந்திய சீன எல்லையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பதிலுக்கு இந்திய வீரர்களும் சீன எல்லையை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதில் உயிரிழந்த சீன வீரர்கள் விவரம் குறித்த தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட மறுத்தது.

அப்போது ஏற்பட்ட மோதலினால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. இதனால், போர் மூளும் அபாயம் எழுந்தது. இந்த நிலையில் இருநாடுகளின் தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் போது பாங்கோங் த்சோ ஏரி அருகில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இரு நாட்டு ராணுவத்தின் கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது இரு நாட்டு படைகளையும் முழுமையாக வாபஸ் பெறுவது குறித்து பேசப்பட்டது. இதையடுத்தே இருநாட்டு படைகளும் முழுமையாக வாபஸ் பெறப்பட்டதாக நேற்று இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளன.

Advertisement:

Related posts

தடுப்பூசி குறித்த தவறான பிரச்சாரம் வெற்றி பெறவில்லை; மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கருத்து!

Saravana

ஜே.பி.நட்டாவின் தமிழக பயணம், கூட்டணிக்கு பலம் சேர்க்கும்- சி.டி.ரவி!

Jayapriya

தமிழகத்தில் மக்கள் விரும்பும் அரசாக திமுக அரசு அமைந்திடும்! – மு.க.ஸ்டாலின்

Nandhakumar