இந்தியா முக்கியச் செய்திகள்

மும்பை தனியார் ஓட்டலில் சுயேச்சை எம்.பி சடலமாக மீட்பு!

மும்பையின் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தொகுதியின் சுயேச்சை எம்.பியான மோகன் டெல்கர் மும்பையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

58 வயதான மோகன் டெல்கர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவரின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக குறிப்பு ஒன்றையும் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். ஆனால், பிரேத பரிசோதனைக்கு பின்னரே அது உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மோகன், கடந்த 2004லிருந்து தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2019ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

“வாட்ஸ் அப் பயன்படுத்துவது உங்கள் விருப்பம்”- டெல்லி உயர்நீதிமன்றம்!

Jayapriya

அமெரிக்க அதிபரின் உரை ஆசிரியரானார் இந்திய வம்சாவளி நபர்!

Jayapriya

முதியவரின் சடலத்தை சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ; குவியும் பாராட்டு

Jayapriya