இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி!

காதலித்த வரை மணமுடிக்க தடையாக இருந்த தனது குடும்பத்தினர் ஏழு பேரை கொலை செய்த வழக்கில் பெண் ஒருவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டம் பவங்கேதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். எம். ஏ. பட்டதாரியான இவர் அம்மாவட்டத்தின் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். 2008ஆம் ஆண்டில் ஷப்னம் வீட்டின் அருகே மரம் அறுக்கும் வேலை செய்து வந்த சலீமுக்கும், அவருக்கு காதல் மலர்ந்தது. ஆனால், அவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதலுக்கு இடையூறாக இருந்த தனது குடும்பத்தைக் கொலை செய்ய முடிவு எடுத்த, ஷப்னம் குடும்பத்தினர் அனைவருக்கும் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை அருந்தியப் பின் அவர்கள் மயக்கத்தில் இருந்த நிலையில், ஷப்னம் மற்றும் அவர் காதலன் சலீம் சேர்ந்து கோடாரி கொண்டு ஷப்னமின் தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள், அவர்களின் மனைவி மற்றும் பத்து மாத கைக் குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கில் ஷப்னம் மற்றும் சலீம் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அம்ரோஹா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டை 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. சலீம் ஆக்ரா சிறைச் சாலையிலும் ஷப்னம் ராம்பூர் மாவட்ட சிறைச்சாலையில் உள்ளனர்.

மாநில ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் இவர்கள் அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது. ஷப்னத்திற்கு தண்டனை நிறைவேற்றப்படுமானால், இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி ஷப்னமாகத்தான் இருப்பார்.

Advertisement:

Related posts

டெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!

Nandhakumar

கொரோனா தடுப்பூசி விநியோகம்: பணக்கார, ஏழை நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு!

Ezhilarasan

ஓடிடியில் மாஸ்டர் திரைப்படம்!

Jayapriya