இந்தியா முக்கியச் செய்திகள்

2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,57,229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு கடந்த ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2.22 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தொற்றிலிருந்து 3,20,289 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 15.89 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1.66 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனாவுக்கு 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில், தற்போது நாடில் ஆக்சிஜன் பற்றாகுறையா கொரோனா நோயாளிகள் பலரும் உயிரிழக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படவில்லை: சுகாதாரத்துறை செயலாளர்

Ezhilarasan

புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

Karthick

தலைமைச் செயலகத்தில் புதுப்பொலிவுடன் தயாராகும் மு.க.ஸ்டாலின் அறை!

Karthick