செய்திகள் முக்கியச் செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 59,907 புதிய தொற்று பதிவாகியுள்ளது. மேலும் சத்தீஸ்கரில் தொற்று எண்ணிக்கை முதன்முறையாக 10,000 தாண்டியது. கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்திலும் 6,000 க்கும் மேற்பட்ட தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன. இந்நிலையில் 685 பேர் கடந்த ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது 1,29,28,574 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. அவற்றில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 8,43,473 பேரும் மற்றும் 1,18,51,393 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 27,743 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும், 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், புதிதாக 3986 தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை!

Jayapriya

இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா தொற்று!

Ezhilarasan

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மருத்துவமனை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி!

Saravana