இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் சேர்த்திருந்தது. அணியின் கேப்டன் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெள்ப்படுத்தி சதம் விளாசினார். 2ம் நாளான நேற்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து அசத்தினார். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 555 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், 3ம் நாளான இன்று ஆட்டம் தொடங்கியதும் களத்தில் இருந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், இங்கிலாந்து அணி 578 ரன்களில் தனது ஆட்டத்தை நிறைவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்களான ரோகித் சர்மா 6 ரன்னிலும், சுப்மன் கில் 29 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 11 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அவரையடுத்து களமிறங்கிய ரஹானேவும் 1 ரன்னில் வெளியேறினார். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வருவது ரசிகர்களை சோகத்துக்குள்ளாக்கி வருகிறது. தற்போது புஜாரா 38 ரன்னிலும், பண்ட் 34 ரன்னிலும் நிதானமாக ஆடி வருகின்றனர்.
Advertisement: