விளையாட்டு

டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு!

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 5வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி20, ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3- 1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று நடக்கவுள்ள இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நடைபெற்றுவரும் டி20 தொடரை வெல்லும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Advertisement:

Related posts

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Saravana

அக்சர் பட்டேல் அசத்தல்; இங்கிலாந்தை 112 ரன்களுக்குள் சுருட்டிய இந்தியா!

Ezhilarasan

தோனியின் புதிய கெட்டப் சமூக வலைதளத்தில் வைரல்!

Gayathri Venkatesan