விளையாட்டு

அக்சர் பட்டேல் அசத்தல்; இங்கிலாந்தை 112 ரன்களுக்குள் சுருட்டிய இந்தியா!

இந்திய வீரர் அக்சர் பட்டேல் பந்துவீச்சில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3வது போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் பகலிரவு போட்டியாக தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர் டாம் சிப்லியும் பேர்ஸ்டோவும் ரன் எதுவும் எடுக்காமல் முறையே இஷாந்த் சர்மா மற்றும் அக்சர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து விளையாட வந்த கேப்டன் ஜோரூட் 17 ரன்களில் அஸ்வன் பந்து வீச்சில் LBW முறையில் ஆவுட்டாகினார்.

இதன் பின்னர் வந்த வீரர்கள் அக்சர் பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமால் சொற்ப ரன்களில் வெளியேறினார். அந்த அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து இந்திய அணியில் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன்கில் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

Advertisement:

Related posts

குட்டி பார்ட்னருடன் பயிற்சி மேற்கொள்ளும் செரினா வில்லியம்ஸ்!

Jayapriya

சரத்-மணிகா ஜோடி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!

Gayathri Venkatesan

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை; முதலிடத்தை நெருங்கும் விராட் கோலி!

Saravana