மேற்கு வங்கத்தில் ஊழலையும் வன்முறையையும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் புருலியா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்குவங்கத்தின் அனைத்து பகுதிகளையும் ரயில் பாதைகள் மூலம் இணைப்பதற்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கும் எனக் கூறினார்.
தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர், ஆட்சி அமைந்த பின்னர், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டில் பாஜக அரசு கவனம் செலுத்தும் எனத் தெரிவித்தார்.
வேலைக்காக பிற மாநிலங்களை நோக்கி மக்கள் இடம்பெயரும் நிலை மாற்றப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார். திரிணாமுல் காங்கிரஸ் அரசின் நிர்வாகத்தில் ஊழலையும், மாநிலத்தில் வன்முறை நிகழ்வதையும் மம்தா பானர்ஜி அனுமதித்ததாக பிரதமர் குற்றஞ்சாட்டினர். இதனால், மேற்குவங்கத்தில் தொழில்வளம் குறைந்துவிட்டதாகவும் அவர் சாடினார். வரும் மே மாதம் 2ஆம் தேதிக்குப் பின்னர், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும் எனவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
Advertisement: