செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

தூத்துக்குடியில் ரூ. 55 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைப்பதாக முதல்வர் வாக்குறுதி!

ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பெரியதாழையில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விவசாயிகளுக்கு விலையில்லா கால்நடைகள் வழங்கப்பட்டதாகக் கூறினார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மீது உண்மையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே திமுக அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்றும் தெரிவித்தார்.

ஆழ்வார் திருநகரி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், சாத்தான்குளம் பகுதியில் உயர்மட்ட பாலமும், பெரிய தாழையில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவும் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

Advertisement:

Related posts

கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிகட்டு காளை!

Niruban Chakkaaravarthi

விவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!

Saravana

சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தகவல்!

Saravana