செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

தஞ்சையில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி!

தஞ்சாவூர் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஏற்கனவே 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 395 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் எட்டு நபர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களும் ஆசிரியர்களுக்கும் ஆங்காங்கே தொற்று பரவி வருவது பெற்றோர் உட்பட பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை மேலும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில், இரண்டு பெண் ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் தஞ்சாவூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 58 ஆகவும் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆறாகவும் உயர்ந்துள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் கொரோனா சோதனையை சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Advertisement:

Related posts

”மக்கள் நீதி மய்யத்தில் யாரும் எம்எல்ஏ ஆகப்போதில்லை”- கார்த்தி சிதம்பரம்!

Jayapriya

தானியக் கிடங்கில் சிக்கிக்கொண்ட 5 சிறுவர்கள் உயிரிழப்பு!

Karthick

அசாம் சட்டப்பேரவை தேர்தல்: 3 கட்டங்களாக நடைபெறும்

Niruban Chakkaaravarthi