தமிழகத்தின் உள் பகுதிகளில் மேலும் ஒருநாள் அனல்காற்று வீசும் என தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கோடையின் முதல் மாதம் சித்திரை மாதம் இன்னும் பிறக்கவில்லை. ஆனாலும் இந்த ஆண்டு கடந்த ஒரு மாதமாக ஆதவனின் செங்கதிர்கள் காலை முதலே சுட்டெரிக்கிறது. இளைப்பாறலாம் என நினைத்தாலும், மாலையிலும் சூடான அனல் காற்று வீசி வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள தகவல் ஒன்று நம்மை மேலும் வாட்டுகிறது.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி தமிழகத்தின் உள் பகுதிகள், ராஜஸ்தான், விதர்பா ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அனல் காற்று வீசும் என அறிவித்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக அதிக வெப்ப நிலை காணப்படும், அனல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து , பல மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக பதிவானது.
Advertisement: