மத்தியப்பிரதேச மாநிலத்தில், வலுக்கட்டாயமாக இளம்பெண்ணின் தோளில், இளைஞர் ஒருவரை ஏற்றி, அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவரது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கணவர், தன் உறவினர்களுடன் சென்று அப்பெண்ணை அழைத்து வந்து கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
மேலும், அப்பெண்ணின் தோளில் வலுக்கட்டாயமாக இளைஞர் ஒருவரை சுமக்கச் செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பின்னர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய குணா மாவட்ட போலீசார் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
Advertisement: