இந்தியா முக்கியச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 24 பேர் உயிரிழப்பு!

கர்நாடகா மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற இடம் இல்லாத சூழல் உருவகியுள்ளது. அம்மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 217 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் கொரோனாவால் சிகிச்சை பெறுவோருக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை எற்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் இடம் பற்றாக்குறை காரணமாக பலர் வெளியே வீல் சேர்களில் அமர்த்தப்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாம்ராஜ் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று 24 பேர் உயிரிழந்துள்ளனர். இது கர்நாடகா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:

Related posts

எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்

Gayathri Venkatesan

பேரறிவாளன் விடுதலை குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து!

Niruban Chakkaaravarthi

மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்யக்கோரிய வழக்கு; படத்தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க கோர்ட் உத்தரவு!

Saravana Kumar