தமிழகம் முக்கியச் செய்திகள்

முகக்கவசம் அணியாத 1,780 பேருக்கு அபராதம் விதிப்பு: போலீசார் அதிரடி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,780 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குறைந்தபட்சம் தலா 100 பேருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குமரி மாவட்டம் முழுவதும் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் நேற்று ஒரே நாளில் குமரி மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் 1,780 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா ரூ. 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்- வி.எம்.சுதாகர்!

Jayapriya

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி!

Gayathri Venkatesan

ஏடிஎம்மில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப் பட்ட ரூ.1.75 கோடி பறிமுதல்!

Karthick