செய்திகள் முக்கியச் செய்திகள்

சென்னையில் வீட்டிற்கே வந்த கொரோனா தடுப்பூசி!

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாநகராட்சி ஊழியர்கள் 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்தினர். சுகாதாரத்துரை ஊழியர்கள் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தியது பெரும் வரவேர்ப்பை பெற்றுள்ளது.

சென்னையின் மக்கள் தொகையில் 6.7 சதவிகித மக்கள் மட்டுமே இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசிகளை வீட்டிற்கே சென்று சேர்த்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்பவரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 95 வயதடைந்த தம்பதியினருக்கு கொரோனா தடுப்பூசியைச் சுகாதார ஊழியர்கள் அவர்களின் வீட்டிற்கே சென்று செலுத்தினர். இவர்களை தொடர்ந்து அதேகுடியிருப்பில் வசித்துவரும் 45 வயதான 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு சில மணி நேரத்திலேயே 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட முதியவர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது “கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மக்கள் அனைவரும் முன்வரத் தயாராக இல்லை. அப்படியே சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தாளும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது போன்ற நடைமுறை சிக்கல்களால் தயங்குகின்றனர். மேலும் சிலர் பணிநேர சிக்கல்களாலும் நேரமின்மையாலும் தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்கள் எதிர்கொள்கின்றனர். இதனால் மருத்துவமனை ஊழியர்கள் மக்களின் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தினால் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையும், தொற்றிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்” என்றார்.

சென்னையில் வசிக்கும் மக்களில் இதுவரை ஐந்து லட்சம் பேர் மட்டுமே கொரொனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதாவது மொத்த சென்னை வாழ் மக்களில் 6.5% மக்கள் மட்டுமே இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர், இதனால் தடுப்பூசி செலுத்துவதை ஊக்கபப்டுத்தும் வகையில் தடுப்பூசிகளை மக்களின் வீட்டிற்கே கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெரும்பாலான மக்களும், மருத்துவ நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பேசிய சென்னை கார்ப்பரேஹன் கமிஷ்னர் விரைவில் கொரோனா தொற்றைத் தடுக்க தேவையான நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்படும் என்றும் மக்களின் கோரிக்கைகள் நிறைவெற்றப்படும் என்றும் கூறினார்.

Advertisement:

Related posts

பெண்கள், குழந்தைகளை அதிகம் தாக்கும் ரத்தசோகை; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Jayapriya

மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவுடன் 3-ம் கட்ட தேர்தல் நிறைவு!

Gayathri Venkatesan

உலகில் பெண்களுக்கு சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடாக மாறிய ஸ்காட்லாந்து!

Dhamotharan